மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிட 7½ லட்சம் இறால் மீன் குஞ்சுகள் மண்டபம் கடலில் விடப்பட்டன
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 7½ லட்சம் இறால்மீன் குஞ்சுகள் மண்டபம் கடலில் விடப்பட்டன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மரைக்காயர்பட்டினத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் அவ்வப்போது இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் இறால் மீன் மற்றும் நண்டு குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன. இதைத்தவிர மிதவை கூண்டு மூலம் மீன்வளர்ப்பு பற்றியும் பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருவதுடன் மீனவர்களுக்கு இலவசமாக கடல் விரால் குஞ்சுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மண்டபம் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடலில் நேற்று மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் 7½ லட்சம் இறால் மீன் குஞ்சுகள் வாகனம் மூலம் மண்டபம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்பு இறால் குஞ்சுகளுடன் கூடிய கேன்கள் அனைத்தும் மீன்பிடி படகிற்கு ஒன்று மூலம் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மத்திய கடல் மீன் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி தமிழ்மணி, ஆராய்ச்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் விஞ்ஞானிகள் சங்கர், ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு இறால் மீன் குஞ்சுகளை கடலில் விட்டனர்.
இது பற்றி விஞ்ஞானிகள் கூறியயதாவது:-
மீனவர்களின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகின்றது. தற்போது மண்டபம் கடலில் 7½ லட்சம் இறால் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இந்த இறால் குஞ்சுகள் மீனவர்கள் பிடித்து பயன்பெறும் வகையில் 4 மாதத்தில் நன்கு வளர்ந்து விடும். இந்த நிதியாண்டில் இது வரையிலும் 17½ லட்சம் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.
Related Tags :
Next Story