திருவொற்றியூரில் சாலையோர பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
திருவொற்றியூரில் சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது.
திருவொற்றியூர்,
எண்ணூர் விரைவு சாலையில் உள்ள சென்னை துறைமுகத்திலிருந்து, மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலைக்கு ராட்சத குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கு சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது.
இதைத்தொடர்ந்து, குழாய் அமைக்கும் பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் சாலைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பாதையில் வந்து செல்லும் கன்டெய்னர் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு எர்ணாவூர் ஸ்டில் யார்டில் இருந்து, துறைமுகம் செல்வதற்காக கன்டெய்னர் லாரி ஒன்று இரும்பு தகடுகளை ஏற்றிக்கொண்டு எண்ணூர் விரைவுசாலை வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது மஸ்தான் கோவில் அருகே சாலையோரமாக இருந்த பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story