சங்கராபுரம் அருகே, ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வீட்டில் ரூ.1¼ லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை
சங்கராபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வீட்டில் ரூ.1¼ லட்சம் திருடு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தில் லட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இது பற்றி அறிந்த ஓசூரை சேர்ந்த சிவா (வயது 35) என்பவர், லட்சுமிநாராயணபெருமாள் கோவிலில் பூஜை செய்ய விருப்பம் தெரிவித்து கோவில் நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து அவர்கள் கோவிலில் பூஜை செய்ய அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து சிவா தியாகராஜபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் வைத்தியநாதன் என்பவரின் வீட்டில் தங்கி இருந்து 2 நாட்கள் கோவிலில் பூஜைகள் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வைத்தியநாதன் வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.1¼ லட்சத்தை காண வில்லை. அதனை சிவா திருடிச்சென்றதாக தெரிகிறது. இதனால் வைத்தியாநாதன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வைத்தியநாதன் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story