அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் தமிழ்மணியன் முன்னிலை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் உள்ள குறைகளை களைய வேண்டும். அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் முதுகலை ஆசிரியர்களை, பணிவரன் முறை தேதியின் அடிப்படையான கருத்தை கொண்டு முறையான பட்டியல் வெளியிட வேண்டும்.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் தகுதிபெற்ற ஆசிரியர்களின் முழு பட்டியலை வெளியிட வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் பணி நியமன விதியின் அடிப்படையில் அரசாணை வெளியிட வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில துணை தலைவர் குமரவேல், பொருளாளர் கணேஷ், திருச்சி மாவட்ட செயலாளர் குணசீலன் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story