மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 400 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போலீசார் அதிரடி


மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 400 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 5 Aug 2019 4:00 AM IST (Updated: 5 Aug 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூர், அடையாறு, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்து விதிமுறைகளை மீறியதாக 400 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

அடையாறு,

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார்.

இதையடுத்து வாகனங்களில் வரும்போது ஹெல்மெட் அணியாமல் இருத்தல், செல்போன் பேசுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் பலர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார், சென்னை நகர் முழுவதும், பாராபட்சம் பார்க்காமல் சோதனை செய்து விதிமுறைகளை மீறி யார் வந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மயிலாப்பூர், ராயப்பேட்டை, மெரினா, பட்டினம்பாக்கம், அடையாறு, கோட்டூர்புரம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்த வாகன சோதனையில், ஹெல்மெட் அணியாமல் வந்த 400 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போன்று நேற்று முன்தினம் இரவு மெரினாவில் ஒரே நேரத்தில் இளைஞர்கள் 50 பேர் கூடி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அவர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனரா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story