மனைவியை கோடரியால் வெட்டிய வாலிபர் கைது
காரைக்குடியில் மனைவியை கோடரியால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி சோமநாதபுரம் போலீஸ் சரகம் மணியாரம் பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 36). இவர் கேபிள் டி.வி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (29). இவர் செக்காலை வீதியிலுள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். பாண்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 6 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ரேவதி கல்லுப்பட்டி மூன்று ரோடு சந்திப்பு அருகே வரும்போது அவரை வழி மறித்த பாண்டி தரக்குறைவாக பேசி தலைமுடியை இழுத்து பிடித்து கையில் வைத்திருந்த கோடரியால் ரேவதியை வெட்டி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ரேவதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் சோமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைதுசெய்தார்.

Related Tags :
Next Story