சோழவந்தான் அருகே விவசாயி கொலை


சோழவந்தான் அருகே விவசாயி கொலை
x
தினத்தந்தி 5 Aug 2019 4:15 AM IST (Updated: 5 Aug 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே தோட்டத்தில் விவசாயி கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள எரவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது51). விவசாயியான இவருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பால்சாமி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் மனைவி பாப்பம்மாள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது படுகாயத்துடன் பால்சாமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பாப்பம்மாள் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு உசிலம்பட்டி போலீஸ் துணைசூப்பிரண்டு ராஜா, செக்கானூரணி இன்ஸ்பெக்டர் வனிதா உள்பட போலீசார் சென்று விசாரணை செய்தனர். பால்சாமி நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றவர் தனது கட்டிலில் படுத்து இருந்திருக்கிறார்.

இவரை மர்ம கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடி உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பால்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story