ஐகோர்ட்டு உத்தரவிட்டபடி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் நிலை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளபடி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளதால் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய், வரத்துகால்வாய்கள், ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. விருதுநகர் அருகே கோவிந்தநல்லூர் கண்மாயில் பட்டாசு ஆலை நிறுவனம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளதாக புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே தொடர்கிறது.
இதேபோன்று வத்திராயிருப்பு பகுதியிலும், சாத்தூர் அருகிலும் கண்மாய், வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக புகார் கூறப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விருதுநகர் கவுசிகாநதி ஆற்றுப்படுகையிலும் ஆக்கிரமிப்பு உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த வன்னியன்ஊருணி முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊருணியை நிர்வகிக்கும் அறங்காவலர் அதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மதுரை ஐகோர்ட்டும் 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் அருப்புக்கோட்டை ஆர்.டி. ஓ.வுக்கு உத்தரவிட்டது.
ஆனாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் ஊருணி அறங்காவலர் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் ஐகோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி மனு கொடுத்தார். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆக்கிரமிப்புகளை அகற்ற மனுக்கள் கொடுத்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டும் நிலை நீடிக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்திடமும் மக்கள் முறையிட வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையே நீடிக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளபடி, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Related Tags :
Next Story