ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்- என்ஜினீயர் பணிகளுக்கு 290 காலியிடங்கள்
ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் - என்ஜினீயர் பணிகளுக்கு 290 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ. எனப்படுகிறது. இந்திய ராணுவத்துக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்திற்கு தேவையான ஆய்வாளர்களை தேர்வு செய்ய ரெக்ரூட்மென்ட் அண்ட் அசெஸ்மென்ட் சென்டர் எனும் அமைப்பு செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு ஆராய்ச்சியாளர் மற்றும் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பி - கிரேடு தரத்திலான இந்த பணிக்கு மொத்தம் 290 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும், ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது.
கல்வித்தகுதி
என்ஜினீயரிங்/ டெக்னாலஜி பட்டப்படிப்பு படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூலை 29-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://rac.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Related Tags :
Next Story