தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தஞ்சையில், மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு; தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தஞ்சையில் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக பயிற்சி டாக்டர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை மத்தியஅரசு பெறக்கூடாது. இந்திய மருத்துவக்கழகத்தை ஒழிக்கக்கூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது. இணைப்பு படிப்புகளை புகுத்தக் கூடாது. வரைவு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும்.
நவீன அறிவியல் மருத்துவ படிப்பை படிக்காதோர் டாக்டராக பணி செய்ய உரிமம் வழங்கக்கூடாது. மருத்துவ கல்வியை கார்ப்பரேட் வணிகமயமாக்கக்கூடாது. மருத்துவ கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்தியஅரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவில் மருத்துவ மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்கிற தேசிய தகுதித் தேர்வை புகுத்த முடிவு செய்துள்ளது.
இத்தேர்வு தேவையற்றது. மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் தான் பயில்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்கள் அல்லது மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுகளை எழுதிதான் வெற்றி பெறுகின்றனர். எனவே, தற்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறைகளே தொடர வேண்டும்.
மாநில அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைவுத்தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும். வரைவு தேசிய கல்வி கொள்கையால் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற முடியாத நிலை ஏற்படும். எனவே வரைவு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். இந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதியிடம் மத்தியஅரசு ஒப்புதல் பெறக்கூடாது. மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை கவனத்தில் கொண்டு ஜனாதிபதியும் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றனர்.

Related Tags :
Next Story