பூந்தமல்லியில் மேம்பாலத்தில் இருந்து குதித்து டிரைவர் தற்கொலை


பூந்தமல்லியில் மேம்பாலத்தில் இருந்து குதித்து டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2019 3:45 AM IST (Updated: 5 Aug 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் மேம் பாலத்தில் இருந்து குதித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே மேம்பாலம் உள்ளது. நேற்று காலை இந்த மேல்பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஏறி நின்ற மர்மநபர் திடீரென அங்கிருந்து கீழே குதித்துவிட்டார். இதைகண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர்

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தற்கொலை செய்து கொண்டவர், திருமழிசையை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 37) என்பதும், லாரி டிரைவரான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story