திருவள்ளூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1½ கோடி கடன் உதவி


திருவள்ளூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1½ கோடி கடன் உதவி
x
தினத்தந்தி 6 Aug 2019 4:30 AM IST (Updated: 6 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1½ கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள யூனியன் வங்கியில் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சென்னை யூனியன் வங்கியின் பிராந்திய மேலாளர் புல்லாராவ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிளை மேலாளர் விவேகானந்தன், தொட்டிக்கலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகாயமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் அரண்வாயல், அயத்தூர், புன்னப்பாக்கம், தொட்டிக்கலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்களுக்கு தொழில் தொடங்க ரூ.60 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

மேலும் இந்த வங்கியின் 8 கிளைகளின் மூலம் ரூ.1½ கோடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி அளிக்கப்பட்டது.

Next Story