மாவட்ட செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவராக - நவாப் மாலிக் நியமனம் + "||" + Nationalist Congress As the head of Mumbai Appointment of Nawab Malik

தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவராக - நவாப் மாலிக் நியமனம்

தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவராக - நவாப் மாலிக் நியமனம்
தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவராக நவாப் மாலிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவராக இருந்த சச்சின் அஹிர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார். சச்சின் அஹிர் சிவசேனாவில் சேர்ந்தது தேசியவாத காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.


இந்தநிலையில், தேசியவாத காங்கிரசின் மும்பை தலைவராக அக்கட்சியை சேர்ந்த மஜித் மேனன் அல்லது வித்யா சவான் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான நவாப் மாலிக், கட்சியின் மும்பை தலைவராக நியமிக்கப்பட்டார். இதை நேற்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் அறிவித்தார்.

நவாப் மாலிக் மும்பையில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு 4 முறை தேர்வு செய்யப்பட்டவர். மாநில தொழிலாளர் துறை மந்திரியாகவும் இருந்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் 13-ந் தேதி சிவசேனாவில் சேருகிறார் - அவரே வெளியிட்ட தகவல்
வருகிற 13-ந் தேதி சிவசேனாவில் சேரப்போவதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் அறிவித்து உள்ளார்.
2. காந்தி பற்றி அவதூறு டுவீட்; ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை
மகாத்மா காந்தி பற்றி அவதூறு டுவீட் வெளியிட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.