தியாகராஜர் கோவிலில் சுந்தரர்- பரவைநாச்சியார் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தியாகராஜர் கோவிலில் சுந்தரர்- பரவைநாச்சியார் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:30 PM GMT (Updated: 6 Aug 2019 6:46 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுந்தரர்- பரவைநாச்சியார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. தியாகராஜரின் தோழராகவும், 63 நாயன்மார்களில் நால்வரில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்- பரவைநாச்சியார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி சுவாதி திருவிழாவையொட்டி நேற்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலாம்பாள் சன்னதி எதிரில் சுந்தரர்- பரவைநாச்சியார் திருக்கல்யாணம் நடந்தது.

சாமி தரிசனம்

விழாவையொட்டி காலை திருவாரூர் புதுத்தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்தில் இருந்து சுந்தரர் புறப்பட்டு தியாகராஜர் கோவிலை அடைந்தார். முன்னதாக தியாகராஜசாமி அலங்காரத்துடன் எழுந்தருளினார். பின்னர் பரவை நாச்சியார் கோவிலில் இருந்து பெண் அழைப்பு நடந்தது. இதைத்தொடர்ந்து சுந்தரர்-பரவைநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Next Story