கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2019 4:15 AM IST (Updated: 7 Aug 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நாகை மாலி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். மயிலாடுதுறை நகராட்சி குளங்களுக்கு செல்லும் நீர்வழி பாதை, வடிகால் வாய்க்காலை கண்டறிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சியில் பாதாள சாக்கடையால் முக்கிய சாலைகள் தொடர்ந்து அடிக்கடி உள்வாங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும், நகராட்சி குடிநீர் குழாய்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து, அதனை உடனே சீரமைத்து சுத்தமான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story