தென்வணக்கம்பாடி அருகே, வாகனம் மோதி வாலிபர் சாவு


தென்வணக்கம்பாடி அருகே, வாகனம் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 7 Aug 2019 3:45 AM IST (Updated: 7 Aug 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

தென்வணக்கம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி,

வந்தவாசி தாலுகா சேனல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 20). இவர், வந்தவாசி நகரில் 5கண் பாலம் அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

வந்தவாசி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் தென்வணக்கம்பாடி அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story