நெல்முடிக்கரை கண்மாயை சீரமைக்கும் பணி; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


நெல்முடிக்கரை கண்மாயை சீரமைக்கும் பணி; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Aug 2019 3:15 AM IST (Updated: 7 Aug 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் நெல்முடிக்கரை கண்மாய் சீரமைக்கும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் உள்ளது நெல்முடிக்கரை கண்மாய் பல வருடங்களாக தூர்வாரப்படாததால் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காடுபோல் இருந்து வந்தது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்க முடியாமல் இருந்து வந்தது. மேலும் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியவில்லை.

கண்மாயில் காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் அதிகமாக காணப்பட்டன. பல ஆயிரம் ஏக்கர் கொண்ட இந்த கண்மாயை நம்பி திருப்புவனம், நெல்முடிக்கரை, கலியாந்தூர், வெள்ளக்கரை, நயினார்பேட்டை, வலையனேந்தல், திருப்புவனம் புதூர் உள்பட பல கிராமங்கள் பாசன வசதி பெற்று வந்தது.

இந்த கண்மாய் குடிமராமத்து பணிக்காக ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணி தொடங்குவதற்காக பூமி பூஜை விழா, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு கண்மாய் சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சிங்காரம், திருப்புவனம் தாசில்தார் ராஜா, விவசாய சங்க தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story