புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு சிறப்பு கட்டண ரெயில் மத்திய ரெயில்வே அறிவிப்பு


புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு சிறப்பு கட்டண ரெயில் மத்திய ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 4:20 AM IST (Updated: 7 Aug 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை,

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவையொட்டி மும்பை- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில் கூறபட்டு இருப்பதாவது:-

செப்டம்பர் மாதம் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06040) மூன்றாம் நாள் காலை 11.45 மணிக்கு மும்பை எல்.டி.டி. வந்தடையும். இதுபோல செப்டம்பர் 9-ந்தேதி காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரெயில் (06042) மறுநாள் மாலை 6.15 மணிக்கு எல்.டி.டி. வந்தடையும்.

இந்த ரெயில்கள் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடு துறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருத்தணி, சோலாப்பூர், புனே, லோனவாலா, தானே (ரெயில் எண்06042 மட்டும்), கல்யாண் (ரெயில் எண்06040 மட்டும்) உள்ளிட்ட பல ரெயில்நிலையங்களில் நின்று செல்லும்.

எல்.டி.டி.- திருச்சி

இதேபோல செப்டம்பர் மாதம் 10-ந்தேதி எல்.டி.டி.யில் இருந்து பகல் 1.05 மணிக்கு புறப்படும் ரெயில் (06041) மறுநாள் இரவு 9.45 மணிக்கு திருச்சி சென்றடையும். 11-ந்தேதி அதிகாலை 12.45 மணிக்கு எல்.டி.டி.யில் இருந்து புறப்படும் ரெயில் (06045) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story