சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி லடாக்கில் சுற்றுலா விடுதி அமைக்க மராட்டிய அரசு விருப்பம்


சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி லடாக்கில் சுற்றுலா விடுதி அமைக்க மராட்டிய அரசு விருப்பம்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:57 PM GMT (Updated: 6 Aug 2019 10:57 PM GMT)

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து லடாக்கில் சுற்றுலா விடுதி அமைக்க மராட்டிய அரசு விருப்பம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை 2 ஆக பிரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இதன் மூலம் காஷ்மீரில் இனி யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம்.

இந்தநிலையில் காஷ்மீரில் உள்ள லடாக்கில் சுற்றுலா விடுதி அமைக்க மராட்டிய அரசு விருப்பம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஜெயகுமார் ராவல் கூறியதாவது:-

விரைவில் முடிவு

நாங்கள் லடாக் பகுதியில் நிலம் வாங்கி அங்கு மராட்டிய சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் விடுதி அமைக்க விரும்புகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் லடாக் மற்றும் ஜம்மு- காஷ்மீருக்கு வருகை தருகின்றனர். 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதன் மூலம், நாங்கள் அங்கு அதிகாரப்பூர்வமாக விடுதியை அமைக்க முடியும் என்று நம்புகிறோம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story