வானவில் : ரெட்மி புக்


வானவில் : ரெட்மி புக்
x
தினத்தந்தி 7 Aug 2019 4:30 PM IST (Updated: 7 Aug 2019 4:30 PM IST)
t-max-icont-min-icon

ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட் மி 14 அங்குல லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் உள்ளது.

சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த மாடல் விரைவிலேயே இந்தியாவிலும் விற்பனைக்கு வரும். இதில் 8-வது தலைமுறை கோர் ஐ3 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 256 நினைவக வசதி உள்ளது. 

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 10 மணி நேரம் செயல்படும் வகையில் அதிக திறன் கொண்ட ரீசார்ஜபிள் பேட்டரி உள்ளது. டி.டி.எஸ். ஆடியோ உதவி, லேப்டாப் சூடாவதை தடுக்கும் பேன் ஆகியன உள்ளன. இந்த நோட்புக்கில் விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ளது. இத்துடன் மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஹோம் உள்ளது.

Next Story