வானவில் : ஸ்டப்கூல் வால் சார்ஜர்
மின்னணு கருவிகளின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் என இத்தகைய கருவிகளின் தேவை வீடுகளிலும் தற்போது அதிகரித்து வருகிறது.
அதேசமயம் இவற்றின் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. இந்த வகையில் ஸ்டப்கூல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பி.டி10 வாட் டைப் சி சுவற்றில் பொருந்தும் வகையிலான சார்ஜர் மிகவும் உபயோகமானதாகும். இதன் விலை ரூ.1,499.
ஸ்டப்கூல் நிறுவனம் இயர்போன், பவர்பேங்க், சார்ஜர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் புதிய வகை சார்ஜர் பி.ஐ.எஸ். சான்று பெற்றதாகும். இதில் உள்ள யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மூலம் ஸ்மார்ட்போன்களை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
இது வழக்கமான சார்ஜரைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விரைவாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகும். சார்ஜரின் செயல்பாடுகளை உணர்த்துவதற்கு இதில் எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் உள்ளன. இது தவிர யு.எஸ்.பி. இணைப்புடன் கூடிய லைட்னிங் கேபிளையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேபிள் 1.5 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கேபிளின் விலை ரூ.1,699 ஆகும். இவை இரண்டுக்கும் ஆறு மாத உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அளிக்கிறது.
Related Tags :
Next Story