வானவில் : போர்ட்ரானிக்ஸின் வயர்லெஸ் சார்ஜர்


வானவில் :  போர்ட்ரானிக்ஸின் வயர்லெஸ் சார்ஜர்
x
தினத்தந்தி 7 Aug 2019 12:41 PM GMT (Updated: 7 Aug 2019 12:41 PM GMT)

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் மொபைல் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமான மொபைல் சார்ஜரைப் போல அல்லாமல் இதில் அலாரம் கடிகாரம் மற்றும் எல்.இ.டி. விளக்கு இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பவர் பேங்க், புளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகளாகும். இந்நிறுவனம் தற்போது பிரீடம் 4 வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு இது ஏ.பி.எஸ். பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டேப்லெட்டையும் இதில் சார்ஜ் செய்ய முடியும். இத்துடன் யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது. 8 மி.மீ இடைவெளியிலும் வயர்லெஸ் சார்ஜரில் சார்ஜ் செய்ய முடியும். சார்ஜ் ஆவதை உணர்த்தும் இன்டிகேட்டர் விளக்கு இதில் உள்ளது. இவ்வகை சார்ஜரில் 73 சதவீதம் அளவுக்கு சார்ஜிங் திறன் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் டிஜிட்டல் அலாரம் கடிகாரம் உள்ளது. அத்துடன் எல்.இ.டி. விளக்கும் இருப்பது கூடுதல் வசதியாகும். கடிகாரத்தை செயல்படுத்த பன்முக வசதி கொண்ட பொத்தான் உள்ளது. இரவு நேரத்தில் விளக்கு ஒளிர்வதை அணைக்க முடியும்.

அதிக மின்சாரம் கடத்துவதை தடுக்கும் பாதுகாப்பு அம்சமும் இந்த சார்ஜரில் உள்ளது. ஷார்ட் சர்கியூட் ஆபத்துகளையும் இது தடுத்துவிடும். மேலும் கூடுதல் வெப்பமாகி மின்னணு சாதனம் பழுதாவதையும் தடுத்துவிடும். கருப்பு, வெள்ளை நிறங்களில் இது வெளி வந்துள்ளது. இதன் விலை ரூ.2,999. சலுகை விலையாக அமேசான், பிளிப்கார்ட்இணைய தளங்களில் இது ரூ.1,699-க்கு கிடைக்கிறது. 

Next Story