வானவில் : ஹானரின் பாப் -அப் கேமரா டி.வி.


வானவில் :  ஹானரின் பாப் -அப் கேமரா டி.வி.
x
தினத்தந்தி 7 Aug 2019 9:09 PM IST (Updated: 7 Aug 2019 9:09 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஹானர் நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட் டி.வி. சந்தையில் நுழைகிறது.

அதி நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி.கள் வர உள்ளன. 55 அங்குல திரை கொண்ட ஸ்மார்ட் டி.வி.யில் பாப்-அப் கேமரா உள்ளது. இதன் மூலம் டி.வி.யை இயக்குபவர் முகத்தை அறிந்து அதற்கேற்ப இது செயல்படும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் ஹோங்கூ 818 சிப்செட் இடம்பெற்றுள்ளது.

இந்த டி.வி.யில் இரண்டு வெர்ஷன்கள் வர உள்ளன. ஸ்டாண்டர்டு வெர்ஷன் மற்றும் ஹை வெர்ஷன் ஆகிய இரண்டு மாடல்களிலுமே ஏ.ஐ. கேமராக்கள் உள்ளன. இதில் உள்ள ஹோங்கூ 818 எனும் சிப்செட் இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம் கொண்டது.

மோஷன் எஸ்.டி.மேட் மற்றும் மோஷன் காம்பன்சேஷன் (எம்.இ.எம்.சி.) ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. ஹை டைனமிக் ரேஞ்ச் இமேஜிங் (ஹெச்.டி.ஆர்.), சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரிடெக்‌ஷன், டைனமிக் கான்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட், ஆட்டோ கலர் மேனேஜ்மென்ட், வெளிச்சத்தை கட்டுப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் தானாகவே மேற்கொள்ளும். இதற்கு ஏ.ஐ. நுட்பம் பயன்படுகிறது. சீனாவில் ஆகஸ்ட் 10-ம் தேதி அறிமுகமாகும் இந்த பாப் அப் கேமரா டி.வி. இந்தியாவில் வெகு விரைவிலேயே அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story