வானவில் : சோனி மாஸ்டர் சீரிஸ் 2


வானவில் :  சோனி மாஸ்டர் சீரிஸ் 2
x
தினத்தந்தி 7 Aug 2019 9:35 PM IST (Updated: 7 Aug 2019 9:35 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருட்கள் குறிப்பாக வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த சோனி நிறுவனம் மாஸ்டர் சீரிஸில் இரண்டு ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு டி.வி. 55 அங்குலம் உடையதாகவும் மற்றொன்று 65 அங்குலம் கொண்டதாகவும் அறிமுகமாகியுள்ளது. இவை இரண்டுமே 4 கே ஓலெட் திரையைக் கொண்டவை. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் தன்மை கொண்டவை. பிராவியா ஏ9.எப் 4 கே ஹெச்.டி.ஆர். ஓலெட் டி.வி. என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. மாஸ்டர் சீரிஸ் ஏ9.ஜி. 4 கே என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன. இரண்டு மாடலுமே ஓலெட் டிஸ்பிளே கொண்டவையாக இருப்பதால் காட்சிகள் துல்லியமாகவும், கண்ணுக்கு உறுத்தாத வகையிலும் உள்ளன.

இதில் சோனி நிறுவனத்தின் பிக்சர் பிராசஸர் எக்ஸ்1 அல்டிமேட் உள்ளது. மிகவும் மெல்லியதாகவும், அழகிய தோற்றப்பொலிவுடன் இவை வந்துள்ளன. காதுக்கு இனிய இசையை வழங்க 60 வாட் ஸ்பீக்கர்கள், 2 சப் ஊபர்களோடு வந்துள்ளது. இந்த டி.வி.யில் 16 ஜி.பி. நினைவக வசதியும் உள்ளது.

பிளே ஸ்டோர் வசதி மற்றும் நெட்பிளிக்ஸ் இணைப்பு வசதியைக் கொண்டவை. கூகுள் அசிஸ்ட், அலெக்ஸா, ஆப்பிள் ஏர்பிளே ஆகியவற்றின் மூலமும் இந்த டி.வி.யை செயல்படுத்த முடியும். வை -பை இணைப்பு, புளூடூத் இணைப்பு, குரோம்காஸ்ட், எதெர்நெட் போர்ட், ஆர்.எப். இணைப்பு, 2 யு.எஸ்.பி. போர்ட்கள், 4 ஹெச்.டி.எம்.ஐ. இன்புட் ஆகிய வசதிகள் உள்ளன.

டிஜிட்டல் ஆடியோ அவுட் மற்றும் மைக்ரோபோன் போர்ட் வசதியும் இவற்றில் உள்ளன. ஏ9.ஜி 55 அங்குல டி.வி.யின் விலை ரூ.2.69 லட்சமாகும். 65 அங்குல டி.வி.யின் விலை ரூ.3.69 லட்சமாகும். இவை இரண்டுமே சோனி விற்பனையகங்களில் கிடைக்கும். ஆன்லைன் இணையதளங்களிலும் வாங்கலாம்.

Next Story