மக்கள் விரோத மத்திய, மாநில அரசை கண்டித்து இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தும் - திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேட்டி
மக்கள் விரோத மத்திய, மாநில அரசை கண்டித்து இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்று திருப்பூரில் எம்.பி. சுப்பராயன் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் எம்.பி. சுப்பராயன் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் 63 சதவீதம் மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால் 37 சதவீதம் வாக்குகள் பெற்று மோடி மீண்டும் பிரதமராகி விட்டார். கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் ஆட்சியமைக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. கூட்டாக உள்ள அமைச்சரவையில் எடுக்கும் முடிவாக இல்லாமல் மோடி, அமித்ஷா ஆகியோர் எடுக்கும் முடிவாக மாறிவிட்டது. காஷ்மீரை அதானி, அம்பானி, கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், விவசாய நிலங்கள் வழியாக உயர்கோபுரம் அமைப்பது குறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. பூமிக்கு அடியில் மின்பாதை அமைக்கலாம் என்று தெரிவித்தும் அதற்கும் பதில் இல்லை. காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறி வருகிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான அரசாக மத்திய அரசு உள்ளது.
தொழிற்சங்கத்துக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் விரோத மத்திய அரசை கேள்வி கேட்கும் ஜனநாயக கடமையை செய்ய தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்களுடன் இணைந்து இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தும். என்.ஐ.ஏ. சட்டத்தின் மூலமாக அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறார்கள்.
தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது. தமிழக மக்களின் நலன் முற்றிலும் பலி கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் திருப்பூரில் ஜாப்ஒர்க் தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதை சீரமைக்க வேண்டும். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர், பவானி ஒன்றிய பகுதியில் உள்ள குளங்களை நிரப்ப, மேட்டூர் அணையின் உபரி நீரை திறந்து விட வேண்டும். புதிய கல்விக்கொள்கை வர்ணாசிரம கொள்கை வடிவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story