தப்பளாம்பூலியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தப்பளாம்பூலியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:30 AM IST (Updated: 7 Aug 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

தப்பளாம்புலியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

அண்மை காலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. பொருட்கள் வாங்க மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மண்எண்ணெய் உரிய அளவு வழங்கப்படுவதில்லை. அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்கப்படுவதில்லை. தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்தும், ரேஷன் கடை வினியோக குளறுபடிகளை சரிசெய்யக்கோரியும் திருவாரூரில் ஒன்றியத்தில் ரேஷன் கடைகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று தப்பளாம்புலியூர், காரியாங்குடி ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், மாதர் சங்க நிர்வாகிகள் செல்வி, சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல புதுப்பத்தூரில் கிளை செயலாளர் அமிர்தலிங்கம், மாங்குடி வடகரையில் கிளை செயலாளர் முருகையன், துரைக்குடியில் கிளை செயலாளர் ராஜேந்திரன், புதூரில் கிளை செயலாளர்கள் பக்கிரிசாமி, கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சாமியப்பன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story