லாட்டரி சீட்டுகளை அச்சடித்து ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை, தலைமறைவாக இருந்த கும்பல் தலைவன் உள்பட 3 பேர் கைது


லாட்டரி சீட்டுகளை அச்சடித்து ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை, தலைமறைவாக இருந்த கும்பல் தலைவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 5:59 PM GMT)

அன்னூர் அருகே லாட்டரி சீட்டுகளை அச்சடித்து ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தகும்பல் தலைவன் உள்பட 3பேரை போலீசார்கைது செய்தனர்.

கோவை,

அன்னூர் அருகே செல்லப்பம்பாளையம் பகுதியில்மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுஜித்குமார்மற்றும் போலீசார் ஒரு வீட்டில்அதிரடியாக சோதனைநடத்திலாட்டரி சீட்டுகளைஅச்சடித்து விற்றகும்பலை சேர்ந்த13பேரை கைதுசெய்தனர். இந்த கும்பலிடம்இருந்துலாட்டரி சீட்டுகளைஅச்சடிக்க பயன்படுத்தப்பட்டசிறியரக பிரிண்டர்கருவிகள், வாகனங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லாட்டரி சீட்டுஅச்சடிப்பு கும்பல்குறித்துமாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுஜித்குமார்கூறியதாவது:-

லாட்டரி சீட்டுகளைஅச்சடித்து, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலலாட்டரி குலுக்கல்முடிவுகள் வரும்போது, ஆன்லைன் மூலம் அறிந்து முதல் 3நம்பர்களுக்கு பரிசுவழங்குவதாக கூறி பணம்வசூலித்துள்ளனர். தினமும்ரூ.3 லட்சம் வரை வசூலாகியுள்ளது. இதன்படி கடந்த சில மாதங்களில்ரூ.1 கோடிக்கு மேல் பணம் வசூலித்துள்ளனர்.

லாட்டரி சீட்டுகளைஅச்சடித்து விற்ற கும்பல் மீது குண்டர் சட்டத்தில் நட வடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சாமிநாதன் (வயது 58), ஹரி (35), மோகன்பிரபு (35) ஆகிய 3பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும்இந்த கும்பலுக்குசாமிநாதன்தலைவராக செயல்பட்டது தெரியவந்துஉள் ளது. மாவட்டம் முழுவதும்தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. தடை செய்யப்பட்ட லாட்டரியை ஆன்லைன் மூலம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story