நீலகிரி மாவட்ட அரசு விழா அழைப்பிதழில், மேல்சபை பதவி முடிந்தவர் பெயருக்கு பின் எம்.பி. என குறிப்பிட்டு இருந்ததால் சர்ச்சை


நீலகிரி மாவட்ட அரசு விழா அழைப்பிதழில், மேல்சபை பதவி முடிந்தவர் பெயருக்கு பின் எம்.பி. என குறிப்பிட்டு இருந்ததால் சர்ச்சை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 5:59 PM GMT)

நீலகிரி மாவட்ட அரசு விழாவில் மேல்சபை பதவி முடிந்தவர் பெயருக்கு பின் எம்.பி என குறிப்பிட்டு இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் படி, நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான ஊட்டி மாரியம்மன் கோவிலில் பொதுவிருந்து நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற உள்ளது.

இதற்காக இந்து சமய அறிநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன், தக்கார் ஹர்‌ஷினி ஆகியோர் அழைப்பிதழ்களை அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

அந்த அழைப்பிதழில் கே.ஆர்.அர்ஜூணன் (அ.தி.மு.க.) பாராளுமன்ற மாநிலங்களவை (மேல்சபை) உறுப்பினர், ஆ.ராசா நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர், ஆர்.கணே‌‌ஷ் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர், சாந்தி ராமு குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்று இருக் கிறது.மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் கடந்த மாதமே முடிந்து விட்டது. இதுதெரியாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் அழைப்பிதழில் கே.ஆர்.அர்ஜூணன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது போல் அச்சடித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு துறைகள் மூலம் நடத்தப்படும் விழாக்கள், நிகழ்ச்சிகள் தொடர்பாக அழைப்பிதழ்கள் வெளியிடும் முன்பு செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியிடம் காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.

Next Story