கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2019 3:45 AM IST (Updated: 8 Aug 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அடக்குமுறை உரிமை பறிப்பு சட்ட திருத்தங்களை எதிர்த்தும், அரசியல் அமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் அபுபக்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், பாண்டியன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில குழு உறுப்பினருமான மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story