இணையதள வசதியை மாணவர்கள் கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் - நாராயணசாமி அறிவுறுத்தல்
இணையதள வசதியை மாணவர்கள் கல்விக் காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.3.50 கோடி செலவில் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கல்லூரி முதல்வர் குமரன் வரவேற்று பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மாநில அரசின் ரூ.1 கோடி மற்றும் மத்திய அரசின் உதவியுடன் ரூ.3.50 கோடி செலவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எங்கள் அரசு கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறது. புதுவையில் 30 ஆயிரம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 9 ஆயிரம் பேர் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களாக உள்ளனர்.
அதாவது 3-ல் ஒரு பங்கு அரசு ஊழியர்கள் கல்வித் துறையில் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்களின் சிறப்பான பணி காரணமாக தொடர்ந்து நாம் மத்திய அரசின் விருதுகளை பெற்று வருகிறோம். மாணவர்களின் சிறந்த தேர்ச்சியினால் கல்லூரிகளின் தரம் உயர்கிறது. இது அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்.
இந்த கல்லூரிக்கு வேறு எந்த கல்லூரிக்கும் இல்லாத சிறப்பாக 3 வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். அதாவது இலவச வைபை வசதி செய்துகொடுத்துள்ளோம். இணையதள வசதியை மாணவர்கள் கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எதற்காகவும் அதை பயன்படுத்தக்கூடாது.
2-வதாக காணொலி காட்சி வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிற்சி வகுப்புகளையும் நடத்தலாம். 3-வதாக ஆன்லைன் மூலம் நூலகங்களில் உள்ள புத்தகங்கள் குறித்த தொழில்நுட்ப வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவம், என்ஜினீயரிங் போன்று மாணவ, மாணவிகள் தற்போது கலைக்கல்லூரிகளையும் அதிகம் விரும்புகின்றனர்.
தற்போது இந்த கல்லூரி அகில இந்திய அளவில் 100 முதல் 150 இடங்களுக்குள் உள்ளது. அதேபோல் தாகூர் கலைக்கல்லூரி 100-வது இடத்தில் உள்ளது. நாம் 50-வது இடத்துக்கு வரவேண்டும்.
கல்லூரி முதல்வர் பேசும்போது, ஆய்வக வசதி, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை செய்து தரவேண்டும் என்றார். அதையெல்லாம் நிறைவேற்றி இந்த கல்லூரியை மாதிரி கல்லூரியாக மாற்றுவோம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த கல்லூரியை கட்ட திட்டமிடப்பட்டாலும் நிதியில்லை. இந்த அரசு 2 ஆண்டுகளில் கட்டி முடித்ததற்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாநில நிதியிலிருந்து ரூ.98 லட்சம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியிலும் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ. பேசினார்.
விழாவில் உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, புள்ளியியல் துறை தலைவர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story