மினி லாரி டிரைவர் மீது தாக்குதல், தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது


மினி லாரி டிரைவர் மீது தாக்குதல், தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2019 3:45 AM IST (Updated: 8 Aug 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மினி லாரி டிரைவரை தாக்கிய தந்தை - மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நெல்லை,

பாளையங் கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் மருதவள்ளி (வயது 38). இவர் பாளையங் கோட்டை மார்க்கெட்டில் மினி லாரி ஓட்டி வருகிறார். பாளையங் கோட்டை பரதர் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (50). இவரும் மினி லாரி ஓட்டி வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே மினி லாரிகளை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெகன், அவரது மகன் அந்தோணி (24), நண்பர்கள் மாடசாமி (28), செல்வம் (47) ஆகியோர் சேர்ந்து மருதவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை யங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மருதவள்ளி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஜெகன், அந்தோணி, மாடசாமி, செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story