பள்ளிப்பட்டு அருகே சீட்டு பணத்துடன் மாயமான கணவன், மனைவிக்கு வலைவீச்சு


பள்ளிப்பட்டு அருகே சீட்டு பணத்துடன் மாயமான கணவன், மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Aug 2019 3:15 AM IST (Updated: 9 Aug 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே சீட்டு பணத்துடன் மாயமான கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு ஊராட்சியை சேர்ந்தவர் அமுலு என்கிற சாவித்திரி (வயது 40). இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நெல்லேபள்ளிமிட்ட கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (45) என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கரிம்பேடு கிராமத்தில் குடியேறினர். சுப்பிரமணி கிராமங்களில் துணி வியாபாரம் செய்து வந்தார்.

சாவித்திரி அங்கு சீட்டு நடத்திவந்தார். அவரிடம் பலரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்று சீட்டு பணம் செலுத்தி வந்தனர்.

இதேபோன்று 100-க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் செலுத்தினர். மேலும் அமுலு அந்த கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்தார். சில மாதங்களுக்கு முன் இவர் சுய உதவி குழுவுக்கு வங்கி வழங்கிய ரூ.60 ஆயிரத்தை கடனாக பெற்றார்.

மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த ராணி, தேசம்மாள், முனியம்மாள், வரலட்சுமி, கோபால், ரவி, மகேஷ், குப்பன், பாஸ்கர் உள்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து வசூல் செய்த சீட்டு பணம் ரூ.20 லட்சத்துடன் திடீரென்று தன்னுடைய கணவருடன் 4 மாதங்களுக்கு முன்னர் மாயமானார்.

இதனால் இவரிடம் சீட்டு போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தனர். மாயமான கணவன், மனைவி தற்போது திருப்பதி ஜீவனகோனா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சீட்டு பணத்துடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.

Next Story