தாயை அரிவாளால் வெட்டிய மகனுக்கு 5 ஆண்டு சிறை கோவில்பட்டி சப்-கோர்ட்டு தீர்ப்பு


தாயை அரிவாளால் வெட்டிய மகனுக்கு 5 ஆண்டு சிறை கோவில்பட்டி சப்-கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 3:15 AM IST (Updated: 9 Aug 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தாயை அரிவாளால் வெட்டிய மகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கோவில்பட்டி, 

விளாத்திகுளம் அருகே புதூரை அடுத்த வடக்கு முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 70). இவர்களுடைய மகன் ஆனந்த் (34). இவர் கடந்த 15-5-2015 அன்று தன்னுடைய தாயாரிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டார். ஆனால் பேச்சியம்மாள் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் அரிவாளால் தன்னுடைய தாயாரை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்ப்பட்டது பேச்சியம்மாளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். அவர் மீது போலீசார் கோவில்பட்டி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அகிலா தேவி, தாயை அரிவாளால் வெட்டிய ஆனந்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் முருகேசன் ஆஜரானார்.

Next Story