ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு முப்பிலிவெட்டி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் சீரான குடிநீர் வழங்க கோரிக்கை
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு சீரான குடிநீர் வழங்க கோரி முப்பிலிவெட்டி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்திற்கு ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து சீவலப்பேரி முதல் விளாத்திகுளம் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைனில் இருந்து தனி லைன் அமைத்து சீரான குடிநீர் வழங்க கோரி அந்த பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சண்முகராஜ் தலைமையில், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து தாசில்தார் ரகு தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில், சீவலப்பேரி முதல் விளாத்திகுளம் வரையிலான கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் இருந்து தனி பைப்லைன் அமைத்து வழங்க சாத்தியம் இல்லை.
முப்பிலிவெட்டி கிராமத்திற்கு ஏற்கனவே உள்ள குடிநீர் பைப் லைனில் இருந்து தனியாக பைப் லைன் வழங்குவது தொடர்பாக வருகிற 25-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று தனி பைப் லைன் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சமாதான கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர் வெங்கடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story