தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி
x
தினத்தந்தி 9 Aug 2019 3:15 AM IST (Updated: 9 Aug 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மருத்துவ கல்லூரி மாணவர் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் எனப்படும் நுழைவு தேர்வை திணிக்க கூடாது.

நவீன அறிவியல் மருத்துவ படிப்புகளை படிக்காதவர்களை மருத்துவராக பணி செய்ய உரிமம் வழங்க கூடாது. மருத்துவ கல்வியை கார்ப்பரேட் வணிகமயமாக்க கூடாது. வரைவு தேசிய கல்வி கொள்கை-2019-ஐ திரும்ப பெற வேண்டும். மருத்துவ கல்வியில் மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story