பேரணாம்பட்டு அருகே, மோட்டார்சைக்கிளிலிருந்து விழுந்த பெண் பஸ் சக்கரம் ஏறியதில் சாவு
பேரணாம்பட்டு அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியதில் கீழே விழுந்த பெண் அதே பஸ்சின் சக்கரம் ஏறியதில் பரிதாபமாக இறந்தார்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு குல்ஜார் வீதியை சேர்ந்தவர் அப்சல் (வயது 18). இவரது நண்பரின் தாயார் சைனாசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இதனால் அவரை அப்சல் தனது மோட்டார்சைக்கிளில் அமரவைத்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
கொல்லாபுரம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கர்நாடக அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சைனாஸ் மோட்டார்சைக்கிளிலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். அப்சலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விபத்து நடந்த உடன் கர்நாடக அரசு பஸ் நிற்காமல் சென்றது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பஸ் பள்ளிகொண்டா சோதனை சாவடியில் மடக்கி பிடிக்கப்பட்டது. விபத்துகுறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story