13-ந்தேதி நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவுக்கு தடை இல்லை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வருகிற 13-ந்தேதி நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவுக்கு தடை இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
நெல்லையை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் மாரியப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. இந்த மன்றம் தனிப்பட்ட ஒரு விதிமுறையின்கீழ் நிர்வகிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தி இந்த மன்றத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் முறை மாற்றப்பட்டு, 22 பேரை உறுப்பினர்களாக நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த கோர்ட்டு, அந்த 22 பேரும் எந்தவித கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கு ‘கலைமாமணி விருது‘ உள்ளிட்ட விருதுகளுக்கு 200 பேரை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அறிவித்தது. கோர்ட்டு உத்தரவிட்ட பின்பு, அவர்களின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. மேலும் ஒரு துறையில் பணியாற்றுபவரே வேறொரு துறையின் விருதுக்கும் தேர்வாகியுள்ளார்.
எனவே கலைமாமணி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ள தமிழக அரசின் விருது வழங்கும் விழாவிற்கும் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-
வருகிற 13-ந்தேதி தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற உள்ள கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு எந்த தடையும் இல்லை. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கோவிந்தராஜ் என்பவருக்கு மட்டும் விருது வழங்க தடை விதிக்கப்படுகிறது. 1995-ம் ஆண்டிலேயே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ந் தேதிக்குள்ளாக விருதுக்கான தேர்வு முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை முறையாக பின்பற்றினாலே ஒரு விருதுக்கு 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களை பரிசீலிப்பது தவிர்க்கப்படும்.
எதிர்காலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்துக்குள் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அனைத்து கலைஞர்களிடமும் விண்ணப்பம் பெற்று வெளிப்படை தன்மையுடன் பரிசீலித்து விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story