இன்று மாவட்டத்தில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு 1,460 பேர் எழுதுகிறார்கள்


இன்று மாவட்டத்தில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு 1,460 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 10 Aug 2019 4:30 AM IST (Updated: 10 Aug 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதை 1,460 பேர் எழுதுகிறார்கள்.

கிருஷ்ணகிரி, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இது தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற கூடிய ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை மொத்தம் 1,460 பேர் எழுதுகிறார்கள். இதற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் தேர்வு மைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

அதேபோல தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்று வர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதாலட்சுமி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் பாண்டியன், பிரசாத், உதவி பிரிவு அலுவலர்கள் பாலாஜி, கார்த்திகேயன், பாஹம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், கிருஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்சார துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story