தூத்துக்குடி- கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி- கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2019 3:45 AM IST (Updated: 10 Aug 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த மாநிலத்துக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு மாநில பொதுச்செயலாளர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து, தூத்துக்குடி பெரியார் சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சங்கரன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், ஜனநாயக வாலிபர் சங்க மாநகர தலைவர் காஸ்ட்ரோ, பொருளாளர் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, விஜயலட்சுமி, கிருஷ்ணவேணி, நகர குழு உறுப்பினர்கள் முருகன், சக்கரையப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story