ஏனாம் வெள்ள பாதிப்புக்கு கவர்னர் கிரண்பெடியே காரணம் - அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு
ஏனாம் வெள்ள பாதிப்புக்கு கவர்னர் கிரண் பெடியே காரணம் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜூலை மாதம் தொடக்கம் முதலே ஏனாமில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தவுலேஸ்வரம் அணைக்கட்டில் இருந்து 14 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஏனாமில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைவெள்ளம் புகுந்துள்ளது.
மழை வெள்ள பாதிப்புகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டுள்ளார். அங்கு வீடுகளுக்குள் 3 முதல் 4 அடி வரை தண்ணீர் நிற்கிறது. வீடு ஒன்றும் இடிந்துள்ளது.
ஏனாமில் வெள்ள பாதுகாப்பு சுவர் கட்ட ரூ.137 கோடியை மத்திய அரசு தந்தது. ஆனால் அந்த திட்டத்தை கவர்னர் நிறுத்தி உள்ளார். இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணி நடந்திருந்தால் ஏனாம் பாதிக்கப்பட்டிருக்காது. தற்போதைய வெள்ள பாதிப்புக்கு கவர்னர் கிரண்பெடிதான் காரணம். இதை கவர்னர் புரிந்துகொள்ளவேண்டும்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர், தலைமை பொறியாளரிடம் கூறியுள்ளேன். இந்த வெள்ள சேதத்தை பார்த்தாவது அத்திட்டத்தின் தேவையை புரிந்துகொண்டு கவர்னர் கிரண்பெடி அதற்கு உடனடியாக அனுமதி தரவேண்டும். இதை மீடியாக்கள் மூலம் நான் கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.

Related Tags :
Next Story