அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், சாலையில் விழுந்து தொழிலாளி சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், சாலையில் விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Aug 2019 3:45 AM IST (Updated: 10 Aug 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சாலையில் விழுந்து தொழிலாளி பரிதாபமாகஇறந்தார். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை காந்திபார்க்பகுதியில் சாலையோரம் தேங்கியமழைநீரில்மிதந்தபடி 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்பிணமாக கிடப்பதாகஆர்.எஸ்.புரம்போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில்பிணமாக கிடந்தவர்தெலுங்குவீதியைசோ்ந்தபாலாஜி (வயது 37) என்பதும்,கூலித்தொழிலாளிஎன்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம்குறித்து போலீசார்கூறியதாவது:-பாலாஜிக்கு திருமணமாகி6 ஆண்டுகள் ஆகிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டுவீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மனைவியிடம் வெளியே சென்றுவருவதாக கூறிவீட்டைவிட்டு சென்றார். காந்திபார்க் பகுதியில்தள்ளாடியபடி சென்றுசாலையில் விழுந்தார். அந்த நேரம் அங்கு மழை பெய்தது. சாலையில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இரவு நேரம் என்பதால் அவர் இறந்தது யாருக்கும் தெரியவில்லை. மேலும் இவர் மதுகுடித்து விட்டுஎங்கேயாவது படுத்து தூங்கிவிட்டு காலையில்வீடுதிரும்புவதுவழக்கம். இதனால் தான் அவரை இரவு நேரத்தில் உறவினர்கள் தேடவில்லை.நேற்று காலையில் தான் சாலையோரம் தேங்கிய மழை நீரில் அவர்பிணமாக கிடந்தது தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த அவரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலாஜியின்உடலை பார்த்து கதறிஅழுதனர்.

Next Story