புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி - இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி நாகையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகையில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கலை அறிவியல் கல்லூரி முன்பு மத்திய அரசின் கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, கிளை நிர்வாகி ஜோஸ்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story