தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து 3 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி, மலைவாழ் மக்கள் பீதி
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து 3 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்றது. இதனால் மலைவாழ் மக்கள் பீதியில் உள்ளனர்.
தாளவாடி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, தாளவாடி, கேர்மாளம், தலமலை, டி.என்.பாளையம், கடம்பூர், ஆசனூர், ஜீர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன.
இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மலைக்கிராமம் மல்குத்திபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 50). விவசாயி. இவர் தனது மாட்டுக்கொட்டகையில் 5 மாடுகள் மற்றும் 4 ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மாடுகளையும், ஆடுகளையும் மாட்டுக்கொட்டகையில் கட்டி வைத்து வீட்டில் தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ஜேக்கப் திடுக்கிட்டு விழித்தெழுந்தார். உடனே அவர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது ஏதோ ஒரு வனவிலங்கு மாட்டுக்கொட்டகையில் பாய்ந்து சென்றதை கண்டார். உடனே அவர் பதற்றத்துடன் மாட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தார்.
அப்போது 3 ஆடுகள் கழுத்தில் கடிபட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ஆடுகள் இறந்து விட்டன.
இதுபற்றிய தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மலைவாழ் மக்கள் ஜேக்கப் வீட்டுக்கு வந்தனர். மேலும் இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் ஜேக்கப் மாட்டுக்கொட்டகையில் பதிவான கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அது சிறுத்தைப்புலியின் கால்தடம் என தெரியவந்தது. மல்லிகுத்திபுரத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி ஒன்று 3 ஆடுகளையும் அடித்து கொன்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிராமத்துக்குள் புகுந்து 3 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்ற சம்பவம் அங்குள்ள மலைவாழ் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Related Tags :
Next Story