நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:45 PM GMT (Updated: 10 Aug 2019 7:00 PM GMT)

நாகை புதிய பஸ்நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ்நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை நகர செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பகு முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், கம்யூனிஸ்டு தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நகர குழு உறுப்பினர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story