மாவட்ட செய்திகள்

13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் + "||" + Areas where the resistor occurs on the 13th

13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந்தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
வாடிப்பட்டி,

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர், கொண்டயம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி அங்கப்பன்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிகரடு, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், ஆண்டிபட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேலசின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிசபம், நெடுங்குளம் எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், வைரவநத்தம், நகரி, அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், மாணிக்கம்பட்டி ராஜாக்கள்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னபாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும், அலங்காநல்லூர், கோட்டைமேடு, கல்லணை, என்.எஸ்.எம். சர்க்கரை ஆலை ரோடு, 15பி மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தடி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.


இதேபோல் மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், பைபாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி பகுதி, அவனியாபுரம் ஸ்டேட் வங்கி பகுதி, பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில், மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
மாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
3. சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
4. தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை
தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
5. 26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை நகரில் வருகிற 26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.