வேலூரில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வின் 40 சதவீத வாக்கு வங்கி குறையவில்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே ஆமத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் ஆணவ போக்கு காரணத்தினால் தான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் 40 சதவீத வாக்கு வங்கி குறையவில்லை. இந்த தொகுதியின் முடிவு தி.மு.க. அழிவை நோக்கி செல்வதையும் அ.தி.மு.க. வளர்ச்சி பாதையில் செல்வதையும் உறுதி செய்துள்ளது. இரட்டை தலைமை காரணமாக தான் இத்தொகுதியில் அ.தி.மு.க. தோற்றது என்பது தவறானது.
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. இத்தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்கள் அ.தி.மு.க. நல்லது செய்கிறார்கள் என்று நம்பி வாக்கு அளித்துள்ளனர். இத்தொகுதியின் தேர்தல் முடிவு உள்ளாட்சி தேர்தலை பாதிக்காது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இலங்கை தமிழருக்காக நாடாளுமன்றத்தில் வைகோ குரல் கொடுத்தவர். இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த துரோகத்தை உணர்ச்சி மேலிட்டால் தன்னை மறந்து கூறியுள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் வைகோவின் கட்சிக்கு ஆதரவில்லை. வைகோ என்ற தனிமனிதனின் சில கருத்துக்கு ஆதரவு உண்டு.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பணம் தான் தேர்தலை முடிவு செய்கிறது என்று கூறியுள்ளார். இது அனைத்து கட்சிக்கும் பொருந்தாது. ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதனை தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும். கட்சிகள் தனித்து போட்டியிட்டால் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
பணம் தான் தேர்தலில் வெற்றி பெறும் என்று சொன்னால் அம்பானியும், அதானியும், டாட்டாவும், பிர்லாவும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். பிரதமர் மோடி வெற்றி பெற்றிருக்க முடியாது. அரசியல் கட்சிகள் மக்களுக்கு செய்யும் சேவையும், ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் மக்களுக்காக செய்யும் நலத்திட்டங்களுமே மக்களின் ஆதரவை பெற்று தருகிறது. அந்த வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்துவதால் அனைத்து தரப்பு மக்களும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தருகிறார்கள். அடுத்து வரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும்.
அ.தி.மு.க.வில் தான் சாமானியனும் உயர் பதவியை பெற முடியும். தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளது என்பதை வேலூர் தொகுதி உறுதிப்படுத்தியுள்ளது. வேலூரில் கனிமொழி பிரசாரம் செய்ய மு.க.ஸ்டாலின் அனுமதிக்கவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின் அங்கு பிரசாரம் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டார். இதுவே தி.மு.க.வின் வாரிசு அரசியலை உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
மேலும் தளவாய்புரம் அருகே கணபதி சுந்தரநாச்சியார் புரத்தில் நபார்டு வங்கி நிதி மூலம் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனையை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். நிகழ்ச்ச்சியில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் காளிராஜன், கால்நடை மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றுள்ளது. இது அவர்களுக்கு வெற்றி அல்ல. அதே நேரம் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததாக நாங்கள் கருதவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்காக அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடும் மக்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள். ஒரு நாடாளுமன்ற தொகுதி தேர்தலை வைத்து வெற்றி, தோல்வியை கூற முடியாது என்றார்.

Related Tags :
Next Story