தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் விழுந்து பெண் படுகாயம்
தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள எல்லையம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி தீமிதி விழா, மழுவடி சேவை, சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. பெரும்பேர் கண்டிகை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
தீக்குண்டத்தில் விழுந்தார்
அவ்வாறு தீமிதிக்கும் போது சேலை சிக்கியதில் பெரும்பேர்கண்டிகையை சேர்ந்த வென்னியம்மாள் (வயது 60) தீக்குண்டத்தில் விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story