சிதம்பரம், விருத்தாசலம் பகுதி போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா


சிதம்பரம், விருத்தாசலம் பகுதி போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 11 Aug 2019 4:15 AM IST (Updated: 11 Aug 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம், விருத்தாசலம் பகுதி போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விருத்தாசலம்,

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காலியாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காலி இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி, போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், செல்வராஜ் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிதம்பரம் நகர போலீஸ் நிலையம், போக்குவரத்து மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், செந்தில், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், தனிப்பிரிவு காவலர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதையடுத்து போலீஸ் நிலைய வளாகத்தில் மா, வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், அருள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமை தாங்கி, போலீஸ் நிலைய வளாகத்தில் மா, பலா, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபிக்‌ஷா, பாலசுப்பிரமணியன், நுண்ணறிவு பிரிவு ராஜேந்திரன், தனிப் பிரிவு சாமிநாதன், பசுமை தூண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறிவு, முன்னணி விவசாயிகள் வெற்றிச்செல்வம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவில் காவல்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். இதில் போலீஸ் ஏட்டுகள் நல்லதம்பி, ராஜா, விநாயகம், இந்துமதி, கிருபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story