திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதல்; 2 பேருக்கு வெட்டு 15 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 2 பேருக்கு வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கத்தை சேர்ந்தவர் சரத். இவர் நேற்றுமுன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான அப்புன் என்பவருடன் மினிடெம்போவில் திருவள்ளூருக்கு புன்னப்பாக்கம் வழியாக சென்று கொண்டிருந்தார். வழியில் புன்னப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ், சுகன், பிரவீன், சித்தார்த், ஜீம், தமிழ்வாணன், மகேஷ் ஆகியோர் சாலையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அந்த மினிடெம்போவை ஓட்டி வந்த சரத் ஒலி எழுப்பி வழி விட்டு ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 7 பேரும் சரத்தையும், அப்புனையும் தகாத வார்த்தையால் பேசி கையாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கியுள்ளனர்.
15 பேர் மீது வழக்கு
இதை அறிந்து தடுக்க வந்த கருணாகரன், அவரது மகன் வல்லரசு ஆகியோரை அவர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். பதிலுக்கு கருணாகரன் தரப்பில் சந்திரசேகர் என்கிற அப்புன், வல்லரசு, ஆகாஷ், நிர்மலா, சரத், அஜய், ராஜேந்திரன் ஆகியோர் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருந்த சுரேஷை அடித்து உதைத்து அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story