புனே அருகே நிலச்சரிவு சென்னை செல்லும் ரெயில்கள் ரத்து பயணிகள் கடும் அவதி
புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சென்னை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கர்ஜத் - புனே இடையே பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை - சென்னை இடையே இயக்கப்பட இருந்த சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல தமிழக ரெயில்கள் புனே, சோலாப்பூர் வரை இயக்கப்பட்டு மீண்டும் அங்கு இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
நேற்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி ரத்து செய்யப்பட்ட தமிழக ரெயில்கள் விவரம் வருமாறு:-
11-ந் தேதி (இன்று) மற்றும் 15-ந் தேதிகளில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:11028), 11-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் இயக்கப்பட இருந்த சி.எஸ்.எம்.டி. - சென்னை சென்ட்ரல் (11027) ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல 12-ந் தேதி (நாளை) மும்பை எல்.டி.டி.யில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்ல இருந்த (11073) ரெயிலும், 13-ந் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து எல்.டி.டி. வர இருந்த ரெயிலும் (11074) ரத்து செய்யப்பட்டுள்ளன.
தாதர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்
மேலும் மும்பை நோக்கி வரும் பல தமிழக ரெயில்கள் புனே, சேலாப்பூரில் நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படுகிறது. 15-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி - சி.எஸ்.எம்.டி. ரெயில் (16382) சோலாப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதே போல இந்த ரெயில் (16381) மறுமார்க்கமாக 11 -ந் தேதி (இன்று), 16-ந் தேதி சோலாப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும்.
இதேபோல 12,15,16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் தாதர் எக்ஸ்பிரஸ் (11022) புனே வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் (11021) மறுமார்க்கமாக 13,14 ஆகிய தேதிகளில் புனேயில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்டு செல்லும்.
12,16-ந் தேதி தாதர் - பாண்டிச்சேரி ரெயில் (11005) புனேயில் இருந்து புறப்பட்டு செல்லும். 11 ,15-ந் தேதி கோவையில் இருந்து புறப்படும் மும்பை ரெயில் (11014) புனே வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல இந்த ரெயில் (11013) மறுமார்க்கமாக 12,16-ந் தேதி மீண்டும் புனேயில் இருந்தே கோவைக்கு புறப்பட்டு செல்லும். மும்பை - சென்னை ரெயிலும் (11042,41) 11 ,16-ந் தேதிகளில் புனே வரை இயக்கப்பட்டு மீண்டும் புனேயில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story